கோல மூடா மாவட்ட கால்பந்து போட்டியில் குரூண் கலைவாணி தமிழ்ப் பள்ளி சாம்பியன்!

கோலமூடா, டிச 1-
சுங்கை கித்தா தமிழ்ப்பள்ளியின் ஏற்பாட்டில் 29.11.2024, வெள்ளியன்று நடைபெற்ற கோலா மூடா/யான் மாவட்ட தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான காற்பந்து போட்டியில் குரூண்
கலைவாணி தமிழ்ப்பள்ளியின் காற்பந்து குழுவினர் முதல் நிலையில் வெற்றி வாகை சூடி பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர்.

இப்பள்ளியின் தலைமையாசிரியை திருமதி த .ஜெயலட்சுமி அவர்களின் ஆதரவாலும் புறப்பாட துணைத் தலைமையாசிரியர் திரு.சோ.கார்த்திக் சோமுநாயுடு அவர்களின் ஊக்குவிப்பாலும் , துணைத் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், முன்னால் மாணவர்கள் மற்றும் பள்ளி காற்பந்து கழக ஆசிரியர் திரு.பொன்.வடிவேலு , பயிற்றுநர்கள் திரு.கோ.இரவி, திரு.ச.காளியப்பன், திரு.ப.இரமேஷ் ஆகியோரின் அயராத பயிற்சியாலும் மாணவர்கள் இப்போட்டியில் முதல் நிலையில் வெற்றி பெற்றனர்.

வெற்றிக்கு வேட்கை, வெற்றியின் கோர்வையாக கலைவாணி தமிழ்ப்பள்ளி புறப்பாட நடவடிக்கையில் முத்திரை பதித்து புகழாரம் சூட்ட வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வெற்றிக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நன்கொடையாளர்களுக்கும் கலைவாணி தமிழ்ப்பள்ளியின் சார்பில் நன்றியும் வாழ்த்தினையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles