சுக்மா போட்டியில் பதக்கங்களை வென்ற விளையாட்டாய் களை பாராட்டி கெளரவித்தது பினாங்கு இந்து அறப்பணி வாரியம்!

பட்டர்வொர்த், டிச 1-
அண்மையில் நடைபெற்ற சுக்மா போட்டியில் பதக்கங்களை வென்று சாதனை படைத்த பினாங்கு மாநில இந்திய விளையாட்டாளர்களை பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியம் பாராட்டி கௌரவித்தது.

பினாங்கு பட்டர்வொர்த் கிரவுன் பிளசா ஹோட்டலில் நடைபெற்ற இந்த பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் துணை தலைவர் செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் தலைமை தாங்கினார்.

பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியத்தின் உறுப்பினர் மற்றும் பினாங்கு மாநில ம இகா தலைவர் டத்தோ தினகரன் மற்றும் பகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன், தினேஷ் குருக்கள் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுக்மா போட்டியில் பதக்கங்களை வென்ற சிலம்பம், கராத்தே, வில்வித்தை,குத்து சண்டை, கராத்தே, நெடுந்தூர ஆட்டக்காரர்களுக்கு பாராட்டி சிறப்பு செய்யப்பட்டது.

அவர்களின் தியாகம் மற்றும் வெற்றி பெறுவதற்கான உறுதியை நாங்கள் வெகுவாக பாராட்டினோம்.

அவர்களில் பலர் இன்னமும் படித்து கொண்டே பயிற்சி பெறுகின்றனர்.

நாங்கள் அவர்களுக்கு ஆதரவை வழங்கினோம்.
இதனால் அவர்கள் படிப்பிலும் விளையாட்டிலும் தொடர்ந்து சிறந்து விளங்க முடியும் என்று டாக்டர் லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

இந்த அற்புதமான ஹீரோக்கள் சாம்பியன்கள் மட்டுமல்ல, மேலும் அவர்களின் படிப்பை புறக்கணிக்காமல் விளையாட்டுகளில் தொடர்ந்து பங்கேற்பதற்கு நாங்கள் பக்கப் பலமாக இருப்போம் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles