
காளிதாஸ் சுப்ரமணியம்
பத்தாங் காலி, டிச 2-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலு சிலாங்கூர் மாவட்ட கவுன்சிலர் சுரேஸ் ராவ் (zon -11councilor) நடத்திய தீபாவளி சிறந்த இல்ல உச்சரிப்பில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த உச்சரிப்பில் பத்தாங் காலி சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர் சைபுடின் ஷாபி முக்கிய பிரமுகராக கலந்து கொண்டார்.
உலு சிலாங்கூர் மாவட்ட கவுன்சிலர் புவனேஸ்வரன் பச்சைமுத்து, முருகன், ஸ்ரீகாந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கு பத்தாங் காலி சட்டமன்ற ஒருங்கிணைப்பாலர் சைபூடின் தீபாவளி அன்பளிப்பு வழங்கினார்.
மேலும் இந்த தீபாவளி விருந்து உபசரிப்பில் கலந்து கொண்ட கெர்லிங் குருகுல மாணவர்களுக்கு கவுன்சிலர் ராஜேஸ் ராவ் தீபாவளி அன்பளிப்பு வழங்கினார்.
மேலும் உதவி தேவைப்படும் மக்களுக்கு அன்பளிப்புகளும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.