எனக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா! பிரதமர் முடிவு செய்யட்டும்

புதிய அமைச்சரவையில் எனக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா என்பதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முடிவு செய்யட்டும் என்று அமானா கட்சி தேசிய தலைவர் முகமட் சாபு தெரிவித்தார்.

நாட்டில் மிகவும் பிரபலமான அரசியல்வாதியாக மாட் சாபு விளங்குகிறார்.

கோத்தா ராஜா நாடாளுமன்ற தொகுதியில் இவர் 73,000 வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் அமோக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

இந்த தேர்தலில் அமானா கட்சி எட்டு நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.

அந்த வகையில் அமானாவுக்கு இரண்டு முழு அமைச்சர் பதவிகள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles