உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் அடுத்த சுற்றுக்கு அர்ஜெண்டினா – மெக்சிகோ தேர்வு

உலகக் கிண்ண கால்பந்து தொடரில் நள்ளிரவு நடைபெற்ற ஆட்டத்தில் பலம் வாய்ந்த அர்ஜெண்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் போலந்தை வீழ்த்தியது.

.46ஆவது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் கோல் அடித்து தனது அணியை முன்னிலை பெறச் செய்தார்.

பின்னர் 67ஆவது நிமிடத்தில் ஜூலியன் அல்வரெஸ் ஒருகோல் அடித்து அர்ஜென்டினா வெற்றியை உறுதி செய்தார்.

கூடுதல் நேரம் வழங்கப்பட்ட நிலையில் போலந்து அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.

ஆட்ட நேர முடிவில் 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற அர்ஜெண்டினா புள்ளி பட்டியலில் முதல் இடம் பிடித்து, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

மற்றொரு ஆட்டத்தில் மெக்சிகோ 2-1 என்ற கோல் கணக்கில் சவூதி அரேபியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles