இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் சமநிலை!

இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் அர்செனல் அணியினர் சமநிலை கண்டனர்.

கிராவன் கோட்டஜ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் புல்ஹாம் அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அர்செனல் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் புல்ஹாம் அணியுடன் சமநிலை கண்டனர்.

அர்செனல் அணியின் கோலை வில்லியம் சபா அடித்த வேளையில் புல்ஹாம் அணியின் கோலை ராவ்ல் ஜிமானேஸ் அடித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் செல்சி அணியினர் 4-3 என்ற கோல் கணக்கில் டோட்டன்ஹாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

லெய்செஸ்டர் சிட்டி அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் பிரிக்டோன் அணியுடன் சமநிலை கண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles