நாளை அமைச்சரவை அறிவிக்கப்படலாம்!

நாட்டின் 10 ஆவது பிரதமராக பதவி ஏற்று சிறப்பாக பணியாற்றி வரும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை அமைச்சரவை பட்டியலை அறிவிக்கலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

மொகிதீன் யாசின் – இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பிரதமராக இருந்த போது 32 அமைச்சர்கள்.

ஆனால் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 25 அமைச்சர்கள் மட்டுமே இடம் பெறும் வகையில் அமைச்சரவை பட்டியலை தயாரித்துள்ளார்.

40 இடங்களைப் பிடித்து சாதனைப் படைத்த ஜசெக கட்சிக்கு 5 அமைச்சர்கள், கெஅடிலான், தேசிய முன்னணிக்கு தலா 4 அமைச்சர்கள், சரவாக் ஜிபிஎஸ் கட்சிக்கு 3 அமைச்சர்கள், சபா ஜிஆர்எஸ் மற்றும் அமானா கட்சிக்கு தலா 2 அமைச்சர்கள் வழங்கப்படலாம்.

சபா வாரிசான் மற்றும் உப்கோ கட்சிக்கு தலா 1 அமைச்சர் பதவி காத்திருக்கிறது.

இது தவிர்த்து அம்னோ , ஜிபிஎஸ் கட்சிகளுக்கு தலா துணை பிரதமர் பதவியும் காத்திருக்கிறது.

மூவார் நாடாளுமன்ற தொகுதியில் அமோக வெற்றி பெற்ற மூடா கட்சி தலைவர் சைட் சாடிக்கிற்கு அமைச்சர் பதவி கிடைக்குமா என்பது நாளை தெரிந்து விடும்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles