
கோலாலம்பூர் டிச 9-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) மனித வள மேம்பாட்டுக் கழகமான எச்ஆர்டி கார்ப் நிர்வாகம் எந்தவித தவறும் செய்யவில்லை அறிவித்துள்ளது.
இதனை பொது கணக்காய்வு குழு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அந்த நிறுவனம் குறித்த தேசிய பொது தணிக்கைக் கணக்குக் குழு அறிக்கையின்படி, எம்ஏசிசி சட்டத்தின் கீழ் எச்ஆர்டி கார்ப் எந்த குற்றமும் செய்யவில்லை என்று ஊழல் தடுப்பு நிறுவனம் தெளிவுபட கூறியுள்ளது.
“எங்களது விசாரணையின் முடிவில் MACC சட்டத்தின் கீழ் எந்த குற்றமும் நிகழவில்லை என்பதை நாங்கள் கண்டறிந்தோம் என்று ஏஜென்சியின் அதிகாரி Fuad Sedet கூறினார்..
2024 ஆம் ஆண்டு தேசிய பொது தணிக்கைக் குழுவின் அறிக்கையில் HRD Corp மீதான ஊழல், அதிகார துஷ்பிரயோகம், நிதி முறைகேடு ஆகியவற்றை குறித்த விசாரணையை கடந்த ஜூலை மாதம் MACC தொடங்கியது.
விசாரணையின் முடிவு தற்போது HRD Corp எந்த தவறும் செய்யவில்லை என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC அறிவித்துள்ளது.
முன்னதாக ஹெச் ஆர் டி கோர்ப்பின் தலைமை இயக்குனர் டத்தோ வீரா ஷாகுல் ஹமீத் தாவூத், ஜூலை மாதம் எம்ஏசிசியின் விசாரணையை எளிதாக்குவதற்காக தன்னார்வ விடுப்பு எடுத்து அதன் பின்னர் பணிக்குத் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

