
சுங்கைபட்டாணி டிச-11-சபா பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த பட்டமளிப்பு விழாவில் சுங்கைபட்டாணியைச் சேர்ந்த சுஹாசன் பிள்ளை தனபாலன் மருத்துவ துறைக்கான (MD) டாக்டர் பட்டம் பெற்றார்.
சுங்கைபட்டாணியைச் சேர்ந்த தனபாலன் கிறீஸ்திமா தம்பதிகளின் குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையான இவர் ஆரம்பம் தொட்டே தனது கல்வியில் முழு விழிப்புணைர்வுக் கொண்டு பயின்று வந்த இவர் பள்ளிகளில் நிகழ்ந்த அனைத்து தேர்ச்சிகளிலும் சிறந்த மாணவராகவே இவர் திகழ்ந்து வந்துள்ளார்.
இவரது மூத்த சகோதரி பல் மருத்துவராகவும் இவரது இளைய சகோதரி கால்நடை மருத்துவத்துறையிலும் பயின்று வருகிறார்.
இவரது தாயார் இங்குள்ள சோமசுந்தர தமிழ்ப்பள்ளியின் தலையாசிரியாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.தந்தை தனபாலன் வியாபரத்துறையில் கால்பதித்து சுங்கைபட்டாணி வட்டாரத்தில் பல நல்ல சேவைகளை தொடர்ந்து செய்து வருபவராவார்.

