
சென்னை டிச 13-
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் உலக நடப்பு சாம்பியன் சீனாவை சேர்ந்த டிங் லிரெனை வீழ்த்தி தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார்.
இதனால் இவருக்கு அதிபர், பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்- அமைச்சர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்த உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு முதல் – அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ. 5 கோடி பரிசுத்தொகையாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

