வரும் டிசம்பர் 21 ஆம் தேதியில் பன்னாட்டு இளைஞர் பகுத்தறிவு கருத்தரங்கு!

கோலாலம்பூர் டிச 14-
கடந்த ஆண்டு பல இன்னல்களுக்கு இடையில் கருஞ்சட்டை இளைஞர் படையின் ஏற்பாட்டில் பன்னாட்டு இளைஞர் பகுத்தறிவு கருத்தரங்கு நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த களப்பணியாளர்கள் தோழர் மதிவதனி, தோழர் பாரதி கண்ணன், தோழர் திலகவதி, தோழர் சினேகா மற்றும் அமெரிக்காவிலிருந்து தோழர் அமரன் பேராளர்களாக வந்திருந்தனர்.

கடந்தாண்டு கருத்தரங்கிற்கு பிறகு கருஞ்சட்டை இளைஞர் படை பல முன்னெடுப்புகளைச் செய்து வந்துள்ளது.

பெண்கள் நன்னாளை முன்னிட்டு பல்வேறு துறைகளில் உள்ள பெண்களை அவர்களின் பெண்ணியப் பார்வையையும் பெண்களாக அவர்கள் எதிர்நோக்கும் சவால்களையும் பகிர்ந்துகொள்ளும் தளமாக அக்கருத்தரங்கு அமைந்தது.

அதே கருத்தரங்கில் பெண் புகைப்பட கலைஞர்களுக்காக புகைப்பட கண்காட்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது.

நிறைய பெண் புகைப்பட கலைஞர்கள் இதில் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்குச் சான்றிதழ்களும் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, மாதந்தோறும் இணையவழி கருத்தியல் வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டு வருகின்றது

அவ்வகையில் இவ்வாண்டும் இளைஞர்களிடையே சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல செயல்பாடுகளைக் கருஞ்சட்டை இளைஞர் படை முன்னெடுக்கவுள்ளது.

அவற்றுள் முக்கிய அங்கமாக எதிர்வரும் 21 ஆம் நாள் டிசம்பர் 2024, பன்னாட்டு இளைஞர் பகுத்தறிவு கருத்தரங்கு 2.0 நடைபெற இருக்கின்றது.

இரண்டாம் முறையாக நடைபெறும் இந்தக் கருத்தரங்கிற்குத் தமிழ்நாட்டு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் துணை பொது செயலாளர் தோழர் சுந்தரவள்ளி பேச்சாளர்களாக கலந்து கொள்ளவுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த களப்பணியாளர் தோழர் சிவமாலதி பேச்சாளர்களாக இணையவுள்ளார்.

மேலும், மலேசியாவிலிருந்து களப்பணியாளர் தோழர் யோகி, தோழர் காந்திபன் மற்றும் தோழர் சுரேஷ் இணையவுள்ளனர்.

இதைத் தவிர்த்து, ஆஸ்திரேலியா பெரியார் அம்பேத்கர் வாசிப்பு வட்டத்தைச் சேர்ந்த தோழர் சுமதி அவர்கள் மற்றும் கத்தார் நாட்டைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் தோழர் மோஹித் பழகிரி
அவர்களும் இணையம் வழி கலந்துகொள்வர்.

சமூக நீதி, சமத்துவம், சூழலியல் குறித்து, இளைஞர்களுக்கு இடையிலான ஒரு கலந்துரையாடலை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்தக் கருத்தரங்கில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

கருத்தரங்கு குறித்த மேல் விவரங்களுக்கு
+60 11-2692 7211 கருத்தரங்கு செயலகம்

+60 16-591 0564 தோழர் நாகேன்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles