தேசம் ஊடகத்தின் விருதளிப்பு விழாவில் டத்தோ சிவபாலனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

கோலாலம்பூர் டிச 14-
தேசம் ஊடகத்தின் ஏழாம் ஆண்டு விருதளிப்பு விழா நேற்று மாஸ்ஷா பல்கலைக்கழகத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

அந்த வகையில் ஊடகத் துறையில் தனக்கு என்று ஒரு முத்திரை பதித்தவர் டத்தோ சிவபாலன் அவர்கள்.

பெர்னாமா செய்தி நிறுவனத்தின் மூலம் சமுதாயத்திற்கு பல பயனுள்ள படைப்புகள் மற்றும் செய்திகளை வழங்கினார்.

பின்னர் துன் டாக்டர் ச.சாமிவேலு அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் அவரின் பத்திரிகை செயலாளராக டத்தோ சிவபாலன் திறம்பட பணியாற்றினார்.

அதன் பின்னர் தகவல் தொடர்பு துறை அமைச்சில் பணிபுரிந்த இவர் தற்போது தகவல் தொடர்பு துறை அமைச்சர் பாமி பாட்சில் அவர்களின் சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

இவரின் அளப்பரிய சேவைகளை பாராட்டும் வகையில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.

மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் வளர்ச்சிக்கும் இவர் பக்கப்பலமாக இருந்து வருவது மிகவும் பாராட்டுக்குரியது.

இந்த தருணத்தில் மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் டத்தோ சிவபாலன் அவர்களுக்கு சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் மற்றும் செயலவை உறுப்பினர்கள் வாழ்த்துக்களை பதிவு செய்து கொண்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles