16-ஆவது பொது தேர்தலில் தனித்து போட்டியிடுவதா ? இல்லையா? தேசிய முன்னனி முடிவு எடுக்க வேண்டும்!

கோலாலம்பூர் டிசம்பர் – 16
தேசிய முன்னணியின் உறுப்பு கட்சியில் பி.பி.பி – யின் நிலை தொடர்பாக தேசிய முன்னனி இன்னும் எந்த ஒரு பதிலையும் எங்கள் கட்சிக்குக் கொடுக்கவில்லை.

கூட்டம் போட்டு பிறகு அறிவிப்பதாக தேசிய முன்னணி தலைவர் கூறியுள்ள நிலையில் நாங்கள் அமைதியாக காத்துக் கொண்டிருக்கிறோம் என பி.பி.பி. கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்தார்.

இந்நிலையில் தேசிய முன்னணி உறுப்பு கட்சியில் இருக்கும் எங்கள் தோழர்கள் தேசிய முன்னணியின் 50-ஆவது ஆண்டு விழாவில் முன்வைத்த சில தகவல்களைத் நாங்கள் வரவேற்பதாக டத்தோ லோகபாலா தெரிவித்தார்.

குறிப்பாக முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் அவர்களின் வழக்கில் அவருக்கு உரிய நியாமான அணுகுமுறை கிடைக்க வேண்டும் என்பதை ம.இ.காவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ சரவணன், ம.சி.ச தலைவர் டத்தோ ஸ்ரீ வீ. கா சியோங் வலியுறுத்தியதை. பி.பி.பி கட்சி முழுமையாக ஆதரிப்பதாக அவர் தெரிவித்தார்.

அதே நிலையில் பி.பி.பி கட்சி தேசிய முன்னணியின் உறுப்பு கட்சியா? இல்லையா? என்ற பதிலை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் நிலையில் உறுப்பு கட்சியில் உள்ளவர்கள் வரும் 16ஆவது பொது தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதியைத் தான் கோர முடியும் என்ற அணுகுமுறை இந்த கூட்டணிக்கு சரியாக இருக்காது என தெளிவாகச் சொன்னதை நாங்கள் வரவேற்கிறோம் என்றார்.

குறிப்பாக தேசிய முன்னணி வரும் பொது தேர்தலில் தனித்து போட்டியிட போகிறதா நடப்பு அரசாங்கத்துடன் கூட்டணி வைத்து போட்டி போடுகிறதா? என்பதை தெளிவாக முடிவு எடுக்க வேண்டிய காலம் இது.

தனித்து போட்டியிட்டால் உறுப்பு கட்சி தோழமை கட்சிகள் இடையே சலசலப்பு
ஏற்படாது.

ஆனால் கூட்டணி வைத்தால் நிச்சயம் தொகுதி பகிர்வில் சலசலப்பு நிகழும் என டத்தோ லோகபாலா தெரிவித்தார்.

அதனை முன் கூட்டியே உறுப்பு கட்சிகள் குரல் எழுப்பியது நல்லதாக கருதப்படுகிறது. இதற்கு விரைந்து தேசிய முன்னனி ஒரு முடிவு எடுக்க வேண்டும் என டத்தோ லோகபாலா தெரிவித்தார்.

பிபிபி கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செயவலை கூட்டத்திற்கு பின்னர் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles