மென்செஸ்டர் யுனைடெட் அதிரடியில்மென். சிட்டி வீழ்ந்தது!

லண்டன் டிச 16-
இங்கிலீஷ் பிரீமியர் லீக் கிண்ண கால்பந்து போட்டியில் நேற்று இரவு நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் சொந்த அரங்கில் விளையாடிய மென்செஸ்டர் சிட்டி 1-2 என்ற கோல் கணக்கில் மென்செஸ்டர் யுனைடெட் கிளப்பிடம் அதிர்ச்சி தரும் வகையில் தோல்வி அடைந்தது.

மென்செஸ்டர் சிட்டியின் கோலை 36 ஆவது நிமிடத்தில் Gvardio அடித்தார்.

பிற்பகுதியில் 88 ஆவது நிமிடத்தில் பெனால்டி கிக் மூலம் மென்செஸ்டர் யுனைடெட் கோலை Bruno அடித்தார்.

ஆட்டம் முடியும் தருவாயில் அதாவது 90 ஆவது நிமிடத்தில் மென்செஸ்டர் யுனைடெட் 2 ஆவது கோலை Diallo அடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இது மென்செஸ்டர் சிட்டிக்கு 5 ஆவது தோல்வியாகும். 27 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்தில் சிட்டி உள்ளது.

மென்செஸ்டர் யுனைடெட் 22 புள்ளிகளுடன் 13 ஆவது இடத்தில் உள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles