சீனாவில் நடைபெற்ற ஆங்கில நாடக போட்டியில் மாசாய் தமிழ்ப்பள்ளி சாம்பியன்!

ஷெங்சென், டிச 16-
கடந்த 8.12.2024, ஷெங்சென் சீனாவில் நடைப்பெற்ற அனைத்துலக ஆங்கில நாடகப் போட்டியில் மாசாய் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ‘The Most Impressive Onstage Performance’ விருதைப் பெற்றுப் பள்ளிக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

முதலில் இயங்கலையில் நடைப்பெற்ற இப்போட்டியில் மாசாய் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்கப் பதக்கத்தை வென்றனர்.

பங்கெடுத்த 16 பள்ளி நாடகங்களில் மாசாய் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் நாடகம் ‘The Most Impressive Onstage Performance’ விருதைப் பெற்றது.

மேலும், நாடகத்தின் முதன்மை கதாநாயகிகளான பி. பார்கவி மற்றும் தி. துர்கா ஆகிய இருவருக்கும் சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது.

2018இல் ஹாங் கோங் அனைத்துலக நேரடி நாடகப் போட்டியில் கலந்து வெற்றிப் பெற்றனர்.

இந்த பள்ளி மாணவர்கள். அங்க மட்டுமல்லாமல், இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் சென்னை இந்தியாவில் இப்பளியில் சேர்ந்த மாணவர்களும், பெற்றோர்களும் பக்தப் படகலாதன் எனும் நாடகத்தில் பங்கிட்டு ஒரு சிறப்பான படைப்பை படைத்தனர்.

ஆதரவும் ஊக்கமும் கொடுத்த மாசாய் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் இரா. இராஜேஸ்வரிக்கும் பள்ளியின் நிர்வாகத்திற்கும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் க. முரளி மற்றும் அவர்தம் குழுவினருக்கும் நன்றி.

மேலும், நாடகக் குழுப் பொறுப்பாசிரியர்களான முனைவர் இரா. கஸ்தூரி, புறப்பாடத் துணைத்தலைமையாசிரியர் க. பிரபாகரன், ஆசிரியர் பே.சுமித்தா, பயிற்றுநர் திரு. ஹொஸ்மான் மட்டுமல்லாது பெற்றொர்களின் சிறப்பான ஒத்துழைப்பாலும் மாணவர்களின் அயராத உழைப்பாலும் இந்த வெற்றியை அடைந்துள்ளனர்.

நமது தமிழ்ப்பள்ளி மாணவர்கள் எதிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை அவர்களின் வெற்றி நமக்குக் காட்டுகிறது.
தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles