

ஒற்றுமை அரசாங்கத்தில் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி மற்றும் சரவாக் ஜிபிஎஸ் கட்சியைச் சேர்ந்த படிலா யூசோப் ஆகியோருக்கு துணைப் பிரதமர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
நாட்டின் அரசியல் வரலாற்றில் இரு துணை பிரதமர்கள் நியமனம் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
இன்று புத்ரா ஜெயாவில் அமைச்சரவை பட்டியலை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.

