13 ஆவது மலேசிய திட்டத்தில் இந்திய சமுதாயத்தின் நலன் கருதி எட்டு அம்ச பரிந்துரைகளை மஇகா சமர்ப்பிக்கும்!

கோலாலம்பூர் டிச 18-
13 ஆவது மலேசிய திட்டம் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்த 13 ஆவது மலேசிய திட்டத்தில் இந்திய சமுதாயத்தின் எதிர்பார்ப்புகள் மற்றும் நலன்கள் தொடர்பில் ம இகா தனது எட்டு அம்சங்கள் சமர்ப்பிக்கும் என்று ம இகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் தெரிவித்தார்.

கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் நுட்பம், மகளிர் மேம்பாடு, சமூக சீர்கேடுகள், தொழில் திறன் துறை கல்வி, பொருளாதார மேம்பாடு தொடர்பில் அம்சங்களை பொருளாதார அமைச்சர் ராபிஸி ரம்லியிடம் ம இகா முன் வைக்கும் என்று அவர் சொன்னார்.

ஒவ்வொரு மலேசிய திட்டத்திலும் இந்திய சமுதாயத்தின் நலன் கருதி மஇகா பரிந்துரைகளை முன் வைத்துள்ளது. அந்த வகையில் 13 ஆவது மலேசிய திட்டத்திலும் இந்திய சமுதாயத்தின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யும் வகையில் மஇகா எட்டு அம்ச திட்டங்களை வைத்துள்ளது என்றார்.

இன்று ம இகா தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ம இகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டாக்டர் நெல்சன், நிர்வாக செயலாளர் டத்தோ டாக்டர் குமாரராஜா, ஊடக பிரிவுத் தலைவர் சிவசுப்பிரமணியம், ம இகா தலைமை செயலாளர் டத்தோ ஆனந்தன், மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ முனியாண்டி, டத்தோ ஆர்.டி. ராஜு, சதாசிவம் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles