
கோலாலம்பூர் டிச 20-
பண்டார் துன் ரசாக் மஇகா மகளிர் அணி தலைவி மேரி புளோரென்ஸ் ஏற்பாட்டில் இந்திய பெண்களுக்காக கண் இமை அலங்கார ஒப்பனையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்று சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
மூன்று நாள் பயிற்சியில் முதல் கட்டமாக 23 பேரும் இரண்டாம் கட்டம் பயிற்சியில் 22 பேரும் கலந்து கொண்டனர்.
இலவசமாக வழங்கப்பட்ட இந்த பயிற்சியில் பி-40 பிரிவைச் சேர்ந்த பெண்கள் அதிகளவில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றனர் என்று மேரி புளோரென்ஸ் தெரிவித்தார்.
செராஸ் மலூரி திரி பிரவுன் போய்ஸ் மண்டபத்தில் நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் விழாவுக்கு ம இகா தேசிய மகளிர் அணி தலைவி மாண்புமிகு சரஸ்வதி நல்லத்தம்பி தலைமை தாங்கினார்.
கண் இமை அலங்கார ஒப்பனை துறையில் இந்திய பெண்களும் சிறந்து விளங்கும் வகையில் அவர்களுக்கு பயிற்சி திட்டத்தை உருவாக்கிய மேரி புளோரென்ஸ் சேவையை பெரிதும் பாராட்டுகிறேன் என்று மாண்புமிகு சரஸ்வதி நல்லத்தம்பி தெரிவித்தார்.
மஇகா தேசிய உச்சமன்ற உறுப்பினரும் விளையாட்டு பிரிவு தலைவருமான ஆண்ட்ரு டேவிட், விலாயா மாநில மஇகா தலைவர் டத்தோ ராஜா சைமன், பண்டார் துன் ரசாக் தொகுதி தலைவர் டத்தோ விஜயமோகன் , மூத்த அரசியல்வாதி டத்தோ பெரு. கருப்பன் ஆகியோர் இதில் முக்கிய பிரமுகர்களாக கலந்து சிறப்பித்தனர்.

