உலக சாம்பியன் குகேஷூக்கு பென்ஸ் காரை பரிசாக வழங்கிய வேலம்மாள் பள்ளி நிர்வாகம்!

18 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பி பார்க்கச் செய்திருக்கின்றார் சென்னையைச் சேர்ந்த குகேஷ். இவருக்கே அவர் பயிலும் பள்ளியில் விலை உயர்ந்த ஆடம்பர கார் பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றது. இவர் சென்னை அயனம்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலா பள்ளியில் பயின்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் (Mercedes Benz E Class), எனும் உலக தரம் வாய்ந்த சொகுசு காரே குகேஷ்-க்கு பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றது. சமீபத்தில், ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமிதம் சேர்த்த குகேஷை கௌரவிக்கும் விதமாக பள்ளிக் கூட வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியின் வாயிலாகவே அவருக்கு இந்த கார் பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக லேசர் கண்காட்சி, டிரோன் ஷோ, எலெக்ட்ரிக் நடனம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles