பிரதமரின் நேரடி மானியத்தின் கீழ் நாட்டில் உள்ள 90 வழிபாட்டு தலங்களுக்கு 31 லட்சத்து 70 ஆயிரம் வெள்ளி மானியம்!

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர் டிச 22-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசின் பிரதமர் துறையின் நேரடி மானிடத்தின் கீழ் இன்று நாட்டில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கு 31 லட்சத்து 70 வெள்ளி மானியம் வழங்கப்பட்டது.

தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் அவர்கள் இன்று 90 வழிபாட்டு தலங்களுக்கு மானியத்தை நேரடியாக எடுத்து வழங்கினார்.

கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் கலா மண்டபத்தில் இன்று காலை நடைபெற்ற இந்த நிகழ்ச்சி வரலாற்றில் முத்தாய்ப்பாக விளங்கியது.

வரலாற்றில் முதல் முறையாக 90 வழிபாட்டு தலங்களுக்கு 31 லட்சத்து 70,00 வெள்ளி மானியம் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

89 கோவில்கள் மற்றும் ஒரு தேவலாயங்களுக்கு இந்த மிகப்பெரிய மானியம் கிடைக்க பெரும் முயற்சியை மேற்கொண்ட துணை அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணனை கோவில் நிர்வாகத்தினர் வெகுவாக பாராட்டினர்.

இந்திய சமுதாயத்தின் நலன் கருதி மிகவும் சிறப்பாக செயல்பட்டு வரும் டத்தோஸ்ரீ இரமணன் இதற்கு முன்னர் இந்திய தொழில் முனைவோருக்கு பல வகைகளில் உதவிக் கரம் நீட்டியுள்ளார்.

இப்போது நாட்டில் உள்ள இந்து கோவில்களில் மேம்பாட்டிற்கும் உதவும் வகையில் பிரதமர் துறையின் நேரடி மானியத்தை பெற்று தந்து பேருதவி புரிந்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles