
ஈப்போ: டிச 30-
தமிழ் இளைஞர்களை நல்வழிபடுத்தும் திட்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்தின் சட்டத்திற்குட்பட்டு மலேசிய திராவிடர் கழகம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தந்தை பெரியாரின் 51ஆம் ஆண்டு நினைவு நாள் மற்றும் பேராக் மாநில 38 ம் ஆண்டு மாநில பேராளர் மாநாட்டை தலைமையேற்ற போது மலேசிய திராவிடக் கழக தலைவர் இரா.கெங்கையா கூறினார்.
இந்த பேராளர் மாநாட்டில் அடுத்தாண்டிற்கான செயல்திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
அத்துடன், கடந்தாண்டு செயலாக்கம் செய்யப்பட்ட திட்டங்கள் மறுசீலனை செய்யப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.
இந்நாட்டில் கடந்த 78 வருடங்களாக மதிக செயல்பட்டு வருகிறது. தமிழர்களால் தமிழ்ப்பள்ளி இந்நாட்டில் இயங்கி் வருகிறது. இதன் வாயிலாக இந்நாட்டு தமிழர்களுக்கு மொழி, இனம், தன்மான உணர்வுகள் விதைக்கப்பட்டு வந்துள்ளதாக மலேசிய திராவிடக் கழக செயலாளர் பொன்.வாசகம் இந்நிகழ்வில் சிறப்பு பிரமுகராக கலந்துக்கொண்டபோது கூறினார்.
இந்நாட்டில் மதிக அரசாங்கத்தின் சட்டத்திற்கும், அதன் திட்டங்களுக்கு மரியாதை அளித்து வருகிறது. ஆகையால், பெரியாரின் கருத்து பதிவுகள் இந்நாட்டு தமிழர்களுக்கு ஏற்றதாக அமைந்துள்ளது. அதன் அடிப்படையில் நமது தமிழ் இளைஞர்கள் மிளிர பெரியாரின் பகுத்தறிவு வாயிலாக செதுக்கி சிறப்பான மனிதநேயத்தை உருவாக்கும் வல்லமை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

