அரசாங்க மருத்துவ கிளினிக்கின் அலட்சியம் காரணமாக முதியோர்கள் பரிதவிப்பு! சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் ஸ்ரீ சங்கர்

பிறை டிச 30-
கிறிஸ்மஸ் பொது விடுமுறை தினமான டிசம்பர் 25 அன்று காலையில் klinik kesihatan Seberang Jaya கிளினிக்கில் மிகவும் ஏமாற்றமாக அமைந்து என்று பிறை எம்பிபிகே கிராமத் தலைவர் ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.

முந்தைய நாள் உண்ணாவிரதத்திற்குப் பிறகு டிசம்பர் 25ஆம் தேதி காலை 8 மணி, மதியம் 12 மணி, மாலை 6 மணி மற்றும் இரவு 9 மணி என – 4 முறை இரத்த சேகரிப்புக்கு ஆஜராகும்படி என் அம்மாவிடம் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக கடந்த செப்டம்பரில், பொது விடுமுறையில் மருத்துவ பணியாளர்கள் அப்பாயின்மென்ட் கொடுத்தது குறித்து தாயாரிடம் கேட்டபோது, ‘அந்த தேதியில் உங்களுக்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இல்லை.

விடுமுறை நாட்களிலும் வழக்கம் போல் கிளினிக் திறந்திருக்கும்’ என்று சொல்லப்பட்டது.

மருத்துவ பணியாளர்கள் கொடுத்து தேதியில் நான் என் அம்மாவை அழைத்து கொண்டு காலை 7.45 மணிக்கு கிளினிக்கிற்கு வந்தேன்.

குழந்தை பிரிவு தவிர, கிளினிக் மூடப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.

நான் விளக்கம் பெற முயற்சித்தேன், என் அம்மா மட்டும் பாதிக்கப்படவில்லை பின்னர் தெரிந்து கொண்டேன்.

மேலும் மூன்று முதியவர்களும் இதே நிலைமையை எதிர்கொண்டனர்.

அனைவரும் சிகிச்சையின்றி வீட்டிற்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

இதற்கு யார் பொறுப்பு?
தவறான தேதியை கொடுத்த நர்ஸ்? அல்லது மருத்துவரா?

அட்டவணையை சரிபார்க்காத மருத்துவர்?
தெளிவான தகவல் பரிமாற்றத்தை உறுதி செய்யாத கிளினிக் நிர்வாகம்?
என் அம்மா போன்ற வயதானவர்களை இப்படி நடத்தக்கூடாது என்று ஸ்ரீ சங்கர் கடுமையாக சாடினார்.

வயதான காலத்தில் அவர்கள் உண்ணாவிரதம் இருக்க மிகவும் சிரமப்பட்டனர்.

சிகிச்சை பெறுவார்கள் என்ற நம்பிக்கையில் அதிகாலையில் வந்தனர். ஆனால் கிளினிக்கின் அலட்சியம் காரணமாக அவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இந்த கசப்பான சம்பவம் குறித்து
செபராங் ஜெயா கிளினிக் நிர்வாகம் மற்றும் மலேசிய சுகாதார அமைச்சகம் (கேகேஎம்) விசாரித்து உறுதியான நடவடிக்கை எடுக்க முடியும் என்று நம்புகிறேன்.

இது சுகாதார சேவைகள் மட்டுமல்ல, நோயாளிகளின் உரிமைகளை மதிக்கும் விஷயமாகும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles