
மெந்தகாப்,டிச30: மலாயா (மலேசியா) மண்ணின் விடுதலைக்கும் தொழிலாளர் உரிமைக்கும் போராடி தூக்கிலிடப்பட்ட தொழிற்சங்கவாதி மலாயா கணபதியின் வாழ்வும் போராட்டமும் என்னும் வரலாற்று நூல் மெந்தகாப் நகரில் பகாங் மாநிலத் தமிழர் குரல் இயக்கத்தின் ஏற்பாட்டில் வெளியீடு காணவுள்ளது.
அவ்வியகத்தின் தலைவர் திரு.கு.கணேசன் தலைமையில் இந்த வரலாற்று நூல் வருகின்ற 04.01.2025இல் (சனிக்கிழமை) மாலை மணி 4.00க்கு மெந்தகாப் NP HALL MENTAKAB, PAHANG மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மலாயா கணபதி வரலாற்று நூல் வெளியீடுக்கு திரு.கு.கணேசன் தலைமையேற்று நிகழ்ச்சியினை தொடக்கி வைக்கும் நிலையில் நூலாசிரியர் சிவாலெனின் வரலாறு குறித்தும் மலாயா கணபதியின் வாழ்வு மற்றும் போராட்டம் குறித்தும் பேசுவார்.
நம் வரலாற்றை மீட்டெடுக்கவும் மீட்டுணரவும் இந்நூல் முக்கிய பங்காற்றும் நிலையில் தொழிலாளர் உரிமைக்காக மட்டுமின்றி இம்மண்ணின் விடுதலைக்கும் போராடிய காரணத்திற்காக தூக்கிலிடப்பட்ட ஒரு தமிழனின் வரலாற்றை அறிய எழுத்தாளர்கள்,வாசகர்கள்,ஆசிரியர்கள்,இனமொழி ஆர்வலர்கள்,மாணவர்கள் மற்றும் பொது மக்களை அன்போடு அழைக்கிறோம்.
இந்நிகழ்ச்சி குறித்த கூடுதல் தகவல்களுக்கு 011-55569691 அல்லது 016-5684302 என்னும் எண்ணில் அழைக்கவும்.

