
பெருவாஸ், டிச 31-
பேராக் மாநில பெருவாஸ் தமிழ் பள்ளியில் நல்லதோர் வீணை செய்தே பாரதியார்
இலக்கிய பெருவிழாவில், பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரின் இந்திய நலப் பிரிவு சிறப்பு அதிகாரி தினகரன் கோவிந்தசாமி சிறப்பு உரையாற்றினார்.
ஆண்டுதோறும் நாம் நற்பணி இயக்கம் ஏற்பாட்டில், இவ்வாண்டு 42 நினைவு ஆண்டாக இந்த விழா நடைபெற்றது.
நிகழ்வில் சிறப்புரையாற்றிய தினகரன், நாம் நற்பணி இயக்கத்தின் தலைவர் திரு தங்கராஜ் அவர்களை வெகுவாக பாராட்டினார்.

உலகம் முழுவதும் பாரதியாரின் புகழ் போற்றப்படுகிறது.அந்த
வகையில் கடந்த பல ஆண்டு காலமாக, இந்த விழாவை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கும் நாம் நற்பணி இயக்கத்தின் செயல்பாடு பாராட்டுக்குரியது .
வரக்கூடிய காலங்களில் பெருவாஸ் மாவட்டத்தில் இருக்கக்கூடிய 15 தமிழ் பள்ளிகளும் இந்த நிகழ்வில் பங்கெடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
தமிழ் விரிவுரையாளர் தமிழ்மாறன் சொற்பொழிவு இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
பெருவாஸ்
மாவட்டத்தை பிரதிநிதித்து பேராக் மாநில இந்து தர்ம மாமன்ற தலைவர் திரு கிருஷ்ணன்,
பந்தாய் சட்டமன்ற உறுப்பினர் அரசியல் செயலாளர் ஆறுமுகம்
உட்பட மாவட்டத்தை பிரதிநிதித்து அரசு சார இயக்கத் தலைவர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்கள்
நிகழ்வில் பாரதியாரின் புதுக்கவிதைகள் பேச்சுப்போட்டி கவிதை போட்டி வர்ணம் தீட்டும் போட்டி பரதம் போன்ற அங்கம் மாணவர்களின் படைப்பு மெய்சிலிர்க்க வைத்ததாக தினகரன் கூறினார்.
நிகழ்வை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்து பாரதியாரின் பாடல் வரிகளோடு தமது உரையை தொடக்கினார் தினகரன் கோவிந்தசாமி.

