வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மக்கள் சுங்கை பூலோ சேவை மையத்தின் தன்னார்வத் தொண்டர்கள் குழு உதவி!

சுங்கை பூலோ, டிச 31-
நீர் தேக்க அணை உடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து, திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சௌஜானா உத்தாமாவில் உள்ள தாமான் ஶ்ரீ ஆலமில் வசிப்பவர்களுக்கு உதவி வழங்க சுங்கை பூலோ நாடாளுமன்ற மக்கள் சேவை மையத்தின் தன்னார்வத் தொண்டர்கள் குழு ஒன்று கூடியது.

இச்சம்பவத்தால் 50க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், தன்னார்வக் குழுவை களத்திற்குச் சென்று சமீபத்திய நிலைமையை ஆய்வு செய்து உடனடி உதவி தேவைப்படும் குடியிருப்பாளர்களுக்கு உதவ சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் உத்தரவிட்டார்

சுங்கை பூலோ நாடாளுமன்ற மக்கள் சேவை மையக் குழு எப்போதும் குடியிருப்பாளர்களின் நலன் பேணப்படுவதை உறுதிசெய்ய முயற்சிக்கும் மற்றும் சமூகத் தலைவர்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுடன் கலந்துரையாடி இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முகநூல் பதிவில் தெரிவித்தார்.

இந்தச் செய்தியின் மூலம், பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களின் சுமையைக் குறைக்க உதவுவதில் துரித நடவடிக்கை எடுத்த மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM), மலேசியக் கவல்துறை (PDRM) மற்றும் தொடர்புடைய அரசு அமைப்புகள் உள்ளிட்ட மீட்புக் குழுக்களுக்கும் ரமணன் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles