
கம்பார்,டிச31: மக்களின் நலன் காக்கப்படுவதிலும் அவர்கள் சார்ந்த மேம்பாடு மற்றும் வளர்ச்சிகள் ஆக்கப்பூர்வமானதாக அமைவதை உறுதி செய்ய கவுன்சிலர்கள்,கிராமத்து தலைவர்கள் உட்பட மக்களின் பிரதிநிதிகளாக மக்களோடு மக்களாய் களம் நிற்கும் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் நல்புரிந்துணர்வோடு ஆக்கப்பூர்வமான செயல்பாடும் அவசிமானதாக அமைந்திருப்பதாக மாலின் நாவார் சட்டமன்ற உறுப்பினர் வீ.பவானி நினைவுறுத்தினார்.
இந்த ஒத்துழைப்பும் ஆதரவும் கம்பார்,கிந்தா மற்றும் பத்து காஜா ஆகிய மூன்று மாவட்டத்தின் கவுன்சிலர்கள்,பாரம்பரிய கிராமத்து தலைவர்கள்,புதுக்கிராம தலைவர்கள் உட்பட அனைத்து தரப்பினர் மத்தியிலும் வலுவானதாக உயிர்பெறுவது மக்களுக்கான மேம்பாடு,வளர்ச்சியோடு திட்டமிடல்,செயல்பாடுகளையும் அதன் இலக்கை நோக்கி இட்டுச் செல்லும் என்றார்.
மக்களின் மேம்பாட்டை சரியான நிலைக்கு உயர்த்தவும் அவர்களின் அடிப்படை தேவைகள் முதற்கொண்டு வசதிகளை மேம்படுத்துவதிலும் பொருளாதார நிலையில் அவர்களை உயர்த்துவதிலும் சம்மதப்பட்ட அனைத்து தரப்பினர் மத்தியில் நல்லதொரு இணைக்கம் இருத்தல் வேண்டும்.வலுவான பிணைப்பும் ஒற்றுமையும் நிலவுமானால் இம்மூன்று மாவட்டமும் சிறந்த இலக்கை நோக்கி பயணிக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இம்மூன்று மாவட்டத்தின் மேம்பாடு,பொது உட்கட்டமைப்பு செயல்திட்டம்,மக்களின் பொருளாதார சூழல் ஆகியவற்றோடு மக்களின் வாழ்வியல் வாழ்வாதாரத்தை தரம் மிக்கதாய் உருமாற்றம் செய்யவும் இந்த ஒற்றுமையும் ஒருங்கிணைந்த செயல்பாடும் அவசியமானது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும்,ஒரு குழுவாக மக்களின் நலனை இலக்காக கொண்டு செயல்படுவதும் செய்து முடிப்பதும் வெற்றியில் இரகசியம் என்று குறிப்பிட்ட சட்டமன்ற உறுப்பினர் மக்களுக்கும் அரசாங்கத்திற்குமான உறவுபாலமாக தாம் தொடர்ந்து செயல்பட ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகள் சாத்தியமாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அதேவேளையில்,மக்களின் குரல் தொடர்ந்து செவிமடுக்கப்படும்.அவர்களின் நலனுக்காக நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என்றும் கூறிய அவர் கவுன்சிலர்கள்,கிராமத்து தலைவர்கள் உட்பட அனைத்து தரப்பும் தங்களுக்கான சேவை,செயல்திறன்,ஆக்கப்பூர்வ கடமை ஆகியவற்றை தொடர்ந்து தரமிக்கதாக இருப்பதை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் உறுதி செய்தல் வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
மேலும்,நடப்பியல் சூழலில் இம்மூன்று மாவட்டத்தின் கவுன்சிலர்கள்,கிராமத்து தலைவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் சிறந்த பங்களிப்பையும் செயல்பாட்டையும் கொண்டிருப்பது சம்மதப்பட்ட மாவட்டங்களின் வளர்ச்சி,மேம்பாடு மற்றும் மக்களின் நல்வாழ்வு நிலையிலிருந்து உறுதி செய்யப்படுவதாகவும் அவர் புகழாரம் சூட்டினார்.
வருடாந்திர நிகழ்ச்சியான கவுன்சிலர்கள்,கிராமத்து தலைவர்களுடனான தேநீர் விருந்து நிகழ்ச்சியில் உரையாற்றுகையில் மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் இதனை வலியுறுத்தினார்.

