புத்தாண்டில் தமது பிறந்த நாளை முன்னிட்டு டத்தோஸ்ரீ சண்முகம் தர்மா சாஸ்தா ஆலய பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்!

காப்பார், ஜன 1-.
இன்று உலக முழுவதும் 2025 புத்தாண்டு கொண்டாட்டம் மிகவும் விமரிசையாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் தருணத்தில் நாட்டில் புகழ்பெற்ற மைசூரி குழுமத்தின் தோற்றுனரும் உரிமையாளருமான டத்தோஸ்ரீ சண்முகம் தமது 53 ஆம் ஆண்டு பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார்.

ஒவ்வொரு ஆண்டும் தொடக்க நாளும் பிறந்த நாளும் ஒன்றே வருவது தமக்கு பெரும் உற்சாகத்தை அளிப்பதாக அவர் கூறினார்.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் தமது பிறந்த நாளை காப்பாரில் உள்ள ஸ்ரீ மகா தர்மசாஸ்தா ஆலயத்தில் ஐப்பன் அருளும் ஆசியும் பெற்று கொண்டாடி வருவது மனதிற்க்கு மகிழ்சியை தருவதாகவும் டத்தோஸ்ரீ சண்முகம் தெரிவித்தார்.

மகேஸ்வர பூஜைக்கு பின்னர் அவர் பக்தர்களுக்கு சுவையான அன்னதானமும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு தழுவிய அளவில் நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles