சுங்கைபட்டாணி பெதேல் அசெம்பிளி திருச்சபை ஏற்பாட்டில் கிறிஸ்மஸ் தின கொண்டாட்டம்500க்கும் அதிகமனோர் கலந்துக் கொண்டனர்

சுங்கைபட்டாணி ஜன 2- பெத்தேல் அசெம்பிளி திருச்சபை ஏற்பாட்டில் மிக விமரிசையாக நடைபெற்ற கிறிஸ்மஸ் தினக் கொண்டாட்டத்தில் 500க்கும் அதிகமானோர் கலந்து விழாவினை சிறப்பாக கொண்டாடினர்.

கிறிஸ்மஸ் தின முதல் நாளான நடைபெற்ற இந்த
நிகழ்வில் பாடல் மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன் அதிர்ஷ்ட குலுக்கல்கள், குழந்தைகளுக்கான ஆங் பவ் விநியோகம் போன்ற சிறப்பு அம்சங்களும் இதில் இடம் பெற்றன.
வறுமைக் கோட்டில் உள்ள பி40யைச் சேர்ந்த சுங்கைபட்டாணி வட்டாரத்தைச் சேர்ந்த 70 குடும்பங்களுக்கு கிறிஸ்மஸ் பரிசுகள் வழங்கப்பட்டன.அதற்கான நன்கொடையினை முன்னாள் புக்கிட் செலம்பாவ் சட்டமன்ற உறுப்பினரும் மெர்போக் தொகுதித் தலைவருமான வி.ஆறுமுகம் ஏற்பாடு செய்திருந்தார்.அதற்கு பெரும் உதவியாக இருந்து பண உதவியினை சுங்கைபட்டாணி நாடாளுமன்ற உறுப்பினர் தௌஃபிக் ஜோகாரி வழங்கியுள்ளார்.


மற்றும் இந்த நிகழ்வு எல்லாம் வகையில் சிறப்பு நிகழ்வதற்கு நன்கொடையினை வழங்கிய நன்கொடை நெஞ்சங்களுக்கும் தங்களது நன்றியினை மறவாமல் தெரிவித்துக் கொண்டனர் நிகழ்வின் ஏர்பாட்டாளர்களான பாஸ்டர் எஸ்.ஜோவெல் மற்றும் தலைமை போதகர் பாஸ்டர் தாமஸ் ராஜ். உடன் போதகர்களான பாஸ்டர் ஜெஸ்மன்,பாஸ்டர் ரிசர்ட்,பாஸ்டர் மெத்யூ,பாஸ்டர் நிக்கி சகோதரர் ஏடல்,

இந்த கிறிஸ்மஸ் கொண்டாட்ட நிகழ்வில் சீடாம் சட்டமன்ற உறுப்பினர் பாவ் வோங்,தொகுதித் தலைவர் வி.ஆறுமுகம்,சமூக ஆர்வலர் டாகடர் த.நோவலன்,சுங்கைபட்டாணி நாடாளுமன்ற உறுப்பினர் தௌஃபிக் ஜோகாரியின் செயலாளர் திரு. சந்திரசேகரன், மெர்போக் தொகுதியின் சுப்பையா,பொருளாளர் ரகுலன்(மணி)ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டனர்.

இந்த நிகழ்வில் சிறப்பு அம்சமாக நிக்கி குழுவினர்
பாடிய “ஏசுவா அமாசியாச்”என்ற பாடல் ஆல்பம் வெளியிடப்பட்டது. நள்ளிரவு மணி 12க்கு கிறிஸ்மஸ் கவுண்டன் செய்தபோது நிகழ்வு உச்சக்கட்டத்தை அடைந்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles