
சுங்கை பூலோ, ஜன.2-
மூலையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக சுங்கை பூலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மக்கள் ஓசை துணை ஆசிரியரும் மலேசியத் தமிழ்ப் பத்திரிக்கையாளர் சங்கத்தின் செயலவை உறுப்பினருமான வெங்கடேஷ் அவர்களை ம.இ.காவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் இன்று சந்தித்து நலம் விசாரித்தார்.
37 வயதுடைய வெங்கடேஷ் கடந்த பத்து தினங்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த தகவல் அறிந்த டத்தோஸ்ரீ எம்.சரவணன் இன்று சுங்கை பூலோ மருத்துவமனையில் வேங்கடேஷ்சை சந்தித்து நலம் விசாரித்தார்.
அதோடு அவரின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறிய டத்தோஸ்ரீ சரவணன், உதவி நிதியையும் வழங்கினார்.
மேல் சிகிச்சைக்கு ஏதாவது உதவி வேண்டும் என்றாலும் தயங்காமல் கேளுங்கள் என நம்பிக்கை தெரிவித்தார்..
இந்த தருணத்தில் வெங்கடேஷை சந்தித்து நிதியுதவி வழங்கிய டத்தோஸ்ரீ சரவணனுக்கு மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளர் வெற்றி விக்டர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

