
சென்னை: ஜன 3-
தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க ₹163.81 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் ஓய்வூதியதாரர்கள் உள்பட சுமார் 8 லட்சம் பேர் பயன்பெறுவார்கள்.
முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசின் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு, சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டது.
ஓய்வூதியதாரர்களுக்கு ₹500 வழங்கப்பட்டது.
இதேபோன்று இந்த ஆண்டும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வரும் நாட்டிற்கே வழிகாட்டக்கூடிய பல முன்னோடி நலத்திட்டங்களை கடைக்கோடி தமிழருக்கும் கொண்டு சேர்த்திட அயராது உழைத்திடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2023-24ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்க ரூ.163 கோடியே 81 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

