காதலிக்க நேரமில்லை’ பொங்கலுக்கு ரிலீஸ் – அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை, ஜன 3-
காதலிக்க நேரமில்லை’ படம் பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்தின் ‘விடாமுயற்சி’ படக்குழுவினர் பொங்கல் வெளியீடு சாத்தியமில்லை என்று அறிவித்துவிட்டார்கள்.

இதனால் பல்வேறு படங்கள் பொங்கல் வெளியீட்டை உறுதிச் செய்து வருகின்றன. இதில் ‘காதலிக்க நேரமில்லை’ படமும் ஒன்று.

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘காதலிக்க நேரமில்லை’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து 2 பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இன்னும் 5 பாடல்கள் வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles