
கோலாலம்பூர், ஜன 4-
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு ஆதரவாக வரும்
திங்கட்கிழமை ஜனவரி 6ஆஆம் தேதி பாஸ் கட்சியின் பேரணி திட்டமிட்டபடி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசன் இன்று அறிவித்துள்ளார்.
பேரரசர், தேசியப் போலீஸ்படைத் தலைவர் ஆகியோர் அறிக்கைகள் வெளியிட்டாலும் திட்டமிட்டது போல் பேரணி நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டார்.
பேரரசர் தலைமையிலான கூட்டரசு மன்னிப்பு வாரியத்தின்
அனைத்துச் சட்ட செயல்முறைகள் மற்றும் நடைமுறைகளைப் பாஸ் கட்சி முழுமையாக மதிக்கிறது என்று அவர் சொன்னார்.
சிறை கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கவோ தண்டைனையைக் குறைக்கவோ பேரரசருக்கு மட்டுமே அதிகாரமுண்டு என்று இஸ்தானா நெகாரா நேற்று ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

