
கோலாலம்பூர் , ஜன 4-
அனைத்துலக விமான நிலையங்களில் சபரி மலைக்கு செல்லும் மலேசிய ஐயப்பன் சுவாமி பக்தர்களுக்கு தனி வழித்தடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
48 நாட்கள் விரதமிருந்து
ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக் கடனைப் பூர்த்தி செய்ய சபரிமலைக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.
அப்படி செல்லும் பக்தர்கள் விமான நிலையங்களில் பல சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர்.
இதற்கு தீர்வு காணுவதற்கு போக்குவரத்து துறை அமைச்சு மலேசிய ஐயப்ப பக்தர்களுக உரிய தேவைகள் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த கோரிக்கையை மலேசிய ஐயப்பன் சேவை சங்கம் கடந்த வாரம் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜூவிடம் முன்வைக்கப்பட்டது.

நேரடியாக இந்த கோரிக்கையை போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் மற்றும் போக்குவரத்து அமைச்சின் தலைமை செயலாளர் டத்தோ ஜனசந்திரனிடம் முன்வைக்கப்பட்டு 3 நாட்களுக்குள் ஒரு தீர்வு காணப்பட்டுள்ளது என்று நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அருள் குமார் தெரிவித்தார்.
இந்த சேவை கட்டம் கட்டமாக மேம்படுத்தப்படும் வேளையில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் மற்றும் போக்குவரத்து அமைச்சருக்கும் இந்த தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அருள் குமார் தெரிவித்தார்.

