Sosma சட்டத்தின் கீழ் ஆறு மாதங்களாக தடுத்து வைப்பு!
பரிதவிக்கும் குடும்ப உறுப்பினர்கள்

சொஸ்மா எனப்படும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் 6 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

என் கணவர் உட்பட பல இந்தியர்கள் என்ன குற்றத்திற்காக சொஸ்மாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது இன்று வரை தெரியவில்லை என்று அபி இராமசாமி என்பவர் வேதனையோடு தெரிவித்தார்.

இந்த சொஸ்மா சட்டம் அகற்றப்பட வேண்டும். என் கணவர் தீவிரவாதி அல்ல என்று பாதிக்கப்பட்ட மேலும் பலர் தெரிவித்தனர்.

இன்று காஜாங் சிறைச்சாலை முன் 40 க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் திரண்டனர்.

சொஸ்மாவில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles