
இன்னும் ஒன்று அல்லது இரண்டு வாரத்தில் துணை அமைச்சர் பதவிகள் அறிவிக்கப்படலாம் என்று பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி தெரிவித்தார்.
துணையமைச்சர் நியமன விவகாரம் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கட்சிகள் சமர்ப்பிக்கும் பெயர் பட்டியலை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பரிசீலனை செய்வார் என்று அவர் சொன்னார்.
கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அமாட் ஷா முன்னிலையில் 28 அமைச்சர்கள் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

