
பெரிக்கத்தான் நேஷனல் ஆட்சியில் 60,000 கோடி வெள்ளி முறைகேடு தொடர்பாக எனக்கு சவால் விடுக்க வேண்டாம் என்று டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.
இந்த 60,000 கோடி தொகையில் பெரும் பணம் இ.பி.எப். பணமாகும்.
இது மக்களின் பணம் என்பதை மறந்து விடாதீர்கள்.
இந்த பணம் செலவழிக்கப்பட்டதில் நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை.
குடும்பம் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு இதில் தொடர்பு உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த 60,000 கோடி வெள்ளி முறைகேடு தொடர்பாக விளக்கம் அளிக்க முன்னாள் நிதியமைச்சர் தெங்கு ஷப்ரூல் அழைக்கப்படுவார் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

