இந்திய சமுதாயத்தை கவனிக்கும் பொறுப்பு அனைத்து அமைச்சர்களுக்கும் இந்திய எம்.பி.களுக்கும் இருக்கிறது!

இந்தியர்கள் உட்பட மலேசியர்களின் நல்வாழ்வைக் கவனிக்கும் பொறுப்பு, அந்தந்த இனங்களுக்கு ஏற்ப ஒரு அமைச்சரின் தோள்களில் மட்டும் சுமத்தப்படாக்கூடாது.

மாறாக ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து அமைச்சர்களுக்கும் இருக்கிறது என்று மனித வள அமைச்சர் வி. சிவகுமார் இன்று தெரிவித்தார்.

அமைச்சரவையில் இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே அமைச்சர் என்பதால் இந்தியர்களின் தலைவிதியும் நலனும் ஓரங்கட்டப்படும் என்ற எண்ணம் எழக்கூடாது.

இந்தியர்கள் எதிர்நோக்கி இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் என் ஒருவன் தோளில் மட்டுமே சுமத்தி விடக் கூடாது.

மாறாக ஒட்டுமொத்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் இந்தியா நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாக இணைந்து இந்தியர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மனித வள அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சிவகுமார் இன்று முறைப்படி புத்ரா ஜெயாவில் உள்ள மனித வள அமைச்சில் தனது பணியை தொடங்கினார்.

மனித வள அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ Mohamed Khair razman அமைச்சர் சிவகுமாரை வரவேற்று விளக்கம் அளித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles