அனைத்து தரப்பினரும் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் வேண்டுகோள்

கோலாலம்பூர் ஜன 9-
அனைத்துத் தரப்பினரும் நாட்டின் பொருளாதார நிலையை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய நேரம் இது என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இன்று கோலாலம்பூர் கேஎல்சிசி மாநாடு மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் மலேசிய பொருளாதார மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உரையாற்றினார்.

நாட்டின் வலிமையை பலவீனப்படுத்தும் மற்றும் அச்சுறுத்தும் அற்ப விஷயங்களைப் பற்றிப் பேசி இனி தாமதிக்கக் கூடாது என்றும் அவர் நினைவு படுத்தியுள்ளார்.

பொருளாதாரத்தைச் சிறப்பாக நிர்வகிக்கவும், முயற்சிகளை அதிகரிக்கவும், ஒத்துழைப்பை ஏற்படுத்தவும், புதிய உரையாடல்களுடன் ஒருவருக்கொருவர் பணியில் கவனம் செலுத்த வேண்டும்.

இதுவே நாட்டிற்கு சிறந்த வாய்ப்பு என்றும் அவர் கூறினார்.

அரசாங்கத்தில் உள்ளவர்கள் உட்பட ஒவ்வொரு நபரின் பலவீனங்களையும் ஒப்புக்கொண்டு மாற்றத்தையும் தழுவலையும் கொண்டு வருவதற்கும் அனைவருக்கும் மாற்றத்தையும் நன்மையையும் கொண்டு வருவதற்கும் தயாராக இருக்கும் நேரம் இது என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles