
சென்னை: ஜன 9- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பாக பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் மகளிர் உதவி தொகையானது குடும்பத்தலைவிகளுக்கு மாதம், மாதம் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் மொத்தமாக ஒரு கோடியே 63 லட்சத்து 57 ஆயிரத்து 195 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அதில் 1 கோடியே 14 லட்சத்து 65 ஆயிரத்து 525 பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வழக்கமாக மாதந்தோறும் 15ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகை பெண்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் நிலையில், பொங்கலுக்காக 6 நாள்கள் முன்பே வங்கிக் கணக்குகளில் செலுத்தும் பணி நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி முன்கூட்டியே வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை மகளிர் உதவி தொகை பெறும் குடும்பத்தலைவிகளின் வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரச ரூ.1000 வழங்காத நிலையில் முன்கூட்டியே மகளிர் உரிமை தொகை வந்தது குடும்பத் தலைவிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

