


கோலாலம்பூர் ஜன 12-
மலேசிய கால்பந்து துறையில் இந்தியர்களின் வசந்த காலம் மீண்டும் திரும்ப வேண்டும் என்று ம இகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி. முருகையா கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த காலங்களில் மலேசிய கால்பந்து துறையில் எம். சந்திரன், சந்தோங் சிங், கராத்து, துரைராஜ், குணாளன், ஜெயகாந்தன், பி. மணியம், டத்தோ தனபாலன் போன்ற தலைசிறந்த கால்பந்து ஜாம்பவான்கள் இருந்தார்கள்.
ஆனால் இன்று விரல் விட்டு எண்ணும் அளவில் இந்தியர்கள் இருக்கிறார்கள்.இது மாற வேண்டும். மீண்டும் மலேசிய கால்பந்து துறையில் இந்தியர்கள் முத்திரை பதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
Klang valley கால்பந்து கிளப் ஏற்பாட்டில்
காலா டின்னர் விருந்து நிகழ்ச்சி சிலாங்கூர் டத்தாரான் மெர்டேக்கா சிலாங்கூர் கிளப்பில் விழா ஏற்பாட்டுக் குழு தலைவர் ராஜன் பரமசிவம் தலைமையில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.
கெராக்கான் கட்சியின் தேசிய உதவித் தலைவர் டத்தோ பரமேஸ்வரன்,மீபா கால்பந்து சங்கத்தின் துணைத் தலைவர் ஏஎஸ்பி இராஜன், புக்கிட் கியாரா மண்ணின் மைந்தர் யாங் பெர்பஹியா டாக்டர் மனோ பரமசிவம்,
மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன், ஸ்ரீ மா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் அறங்காவலர் சந்திரசேகரன் டிஎன்பி, கம்போங் பண்டான் அரசியல் பிரமுகர் ராஜா காளிமுத்து, காயூ ஆரா அண்ணன் மாலை முனி உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

