
அலோர் ஸ்டார், ஜன 12-
கெடா மாநிலத்தில் Kampung keda Tanjung dawai மீனவர் கிராமத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 80,000 வழங்கி பேருதவி புரிந்துள்ளார்.
இந்த மீனவர் கிராமத்தில் 17 வீடுகளில் 14 வீடுகள் பாதிக்கப்பட்டன.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன், கெடா மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மூலமாக 80,000 வெள்ளி வழங்கப்பட்டது.
பிரதமர் துறையின் நிதி பிரிவு செயலாளர் கமில் கூறுகையில் தக்க நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி வழங்கிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்த நிதி பாதிக்கப்பட்ட மக்களின் சுமையை குறைக்க உதவும் என்று அவர் சொன்னார்.

