காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை பிரதமர் வரவேற்றார்

காசாவில் இந்த ஞாயிற்றுக்கிழமை அமலுக்கு வரும் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த அறிவிப்பை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வரவேற்றார்.

இங்கிலாந்துக்கு அலுவல் நிமித்தமாகப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் லண்டனில் மலேசிய ஊடகங்களிடம் பேசுகையில், 

இந்த முக்கியமான நடவடிக்கை, துன்பங்களைத் தாங்கிக் கொண்ட காசா மக்களுக்கு மிகவும் தேவையான நிவாரணத்தை வழங்குகிறது.

மேலும் இந்த ஒப்பந்தத்தை மத்தியஸ்தம் செய்வதில் எகிப்து, கட்டார், அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகளை நான் பாராட்டுகிறேன்.

இப் பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக மாற்றுவதில் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பின் பங்கிற்கும் நான் பாராட்டு தெரிவிக்கிறேன்.

நிலையான அமைதி,காசாவின் மறுகட்டமைப்புக்கு வழிவகுக்கும். அடுத்த கட்டம் குறித்த விவாதங்களுக்கு வழி வகுக்கும் வகையில், போர்நிறுத்தம் கடைப்பிடிக்கப்படுவதை சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles