கோலா நெருஸ் உணவகத்தில் கார்பன் மோனக்சிட் வாயு கசிவை சுவாசித்த மூவர் மயங்கினர்

கோலா நெருஸ் டத்தாரான் Austin னிலுள்ள துரித உணவகத்தின் மூன்று ஊழியரிகள் இன்று காலையில் மயங்கம் அடைந்ததற்கு அங்குள் குளிர் பதனப்பெட்டியில் கார்பன் மோனக்சிட் வாயு கசிந்ததே காரணம் என தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட உணவகத்தில் ஆபத்தான ரசாயனம் தொடர்பான சிறபபுக்குழு , கெர்த்தே தீயணப்பு மீட்பு நிலையம் ஆகியவை மேற்கொண்ட விசாரணையில் இது தெரியவருகிறது. அந்த நச்சு வாயு கசிவு சுவாசிப்பதில் பிரச்னையை ஏற்படுத்தம் என Kuala Nurus தீயணைப்பு மற்றும் மீப்பு நிலையத்தின் தலைவர் அஸ்மி ஓமார் ( Azmi Omar ) தெரிவித்தார்.

இப்போதைக்கு அந்த உணவகம் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு இன்னமும் அங்கு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இன்று காலை 9.30 மணியளவில் நிகழ்ந்த அந்த சம்பவத்தில் 20 வயதுக்குட்பட்ட மூன்று பெண்கள் மயக்கம் அடைந்ததைத் தொடர்ந்து கோலாதிரெங்கானுவிலுள்ள Sultanah Nur Zahirah மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர். அவர்கள் அனைவரின் நிலைமையும் தற்போது சீராக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles