ஸ்ரீ முனிஸ்வரர் ஆலயத்தில் பொங்கல் – தமிழர் பண்பாடு காத்தல் வேண்டும்!!

தமிழர் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் பின்பற்றுவதும் காத்தலும் நமது ஒவ்வொருவரின் கடமை.வீடுகளில் ஆலயங்களிலும் பொங்கல் வைத்து கொண்டாடுவது நமது பாரம்பரிய பெருமையாகும் என்றும் பெங்காலான் டேசா பெலாஞ்சோங்ஙான் ஆலயத் தலைவரும் கவிஞருமான அருட்செல்வர் வீ.மா.சண்முகம் தெரிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் இவ்வாலயத்தில் பொங்கல் விழா மிகவும் சிறப்பாக கொண்டாடி வருவதாகவும் இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் பொங்கல் சிறப்பும் அதன் தனித்துவமும் எடுத்துரைக்கப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்.

தமிழர் கொண்டாட்டத்தில் பொங்கல் பெருமைமிகு விழா என்றும் கூறிய அவர் பொங்கல்,தமிழ்ப் புத்தாண்டை ஒவ்வொரு தமிழரும் நமது அடையாளமாக கொண்டாடி மகிழ வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.

ஆலய நிர்வாகத்தினரும் பொது மக்களும் கலந்து கொண்ட இப்பொங்கல் விழா சிறப்புடன் நமது பாரம்பரியம் காக்கும் வகையில் நடந்தேறியது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles