பிபிபி கட்சியின் அரசியல் பிரிவு தலைவராகடத்தோ மோகன் கந்தசாமி நியமனம்!

கோலாலம்பூர் ஜன 19-
பிபிபி கட்சியின் இந்த ஆண்டின் முதல் உச்ச மற்ற கூட்டம் அதன் தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தலைமையில் நடைபெற்ற வேளையில் கட்சியின் செயல் நடவடிக்கைகள் தொடர்பில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

பிபிபி கட்சி Biro Politik எனப்படும் அரசியல் பிரிவு இன்று அமைக்கப்பட்டது.

கட்சியின் தேசிய துணை தலைவர் டத்தோ மோகன் கந்தசாமி இதற்கு தலைமை ஏற்கும் வேளையில் அனைத்து மாநில தலைவர்கள் மற்றும் இடம் பெறுவார்கள் டத்தோ டாக்டர் லோகபாலா அறிவித்தார்.

வரும் பொதுத் தேர்தலில் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது குறித்து இவர்கள் தொகுதியை அடையாளம் காண்பார்கள்.

மாநில தலைவர்கள் முன் வைக்கும் பரிந்துரைகள் குறித்து டத்தோ மோகன் கந்தசாமி உச்சமன்ற கூட்டத்தில் முன் வைப்பார்.

பின்னர் அது குறித்து பேசி முடிவு எடுக்கப்படும் என்று அவர் சொன்னார்.

இது தவிர்த்து தகவல் தொடர்பு துறை பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் மற்றும் கட்சியின் பட்ஜெட் குறித்தும் இன்று விவாதிக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.

பிபிபி கட்சியின் தேசிய துணை தலைவர் டத்தோ மோகன் கந்தசாமி, செயலாளர் டத்தோ இண்டர்ஜிட் சிங், பொருளாளர் டத்தோஸ்ரீ டல்ஜிட் சிங், இளைஞர் அணி தலைவர் சத்யா சுதாகரன், தகவல் பிரிவு தலைவர் ஸ்டீபன், துணை தலைவர் குமார், சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் உட்பட அனைத்து மாநில தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles