மலேசியாவில் ஜல்லிக்கட்டு போட்டி! பெரிதும் வரவேற்கிறேன் – டத்தோ டாக்டர் லோகபாலா அறிவிப்பு

கோலாலம்பூர் ஜன 19-
தைப்பொங்கல் தமிழர் திருநாளை முன்னிட்டு தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு மிகப் பெரிய அளவில் நடைபெறுகிறது.

தமிழர்களின் வரலாற்று சிறப்புமிக்க இந்த ஜல்லிக்கட்டு போட்டியை மலேசியாவில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுவதை பெரிதும் வரவேற்பதாக பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா இன்று தெரிவித்தார்.

வருங்காலத்தில் இளைய தலைமுறையினர் ஜல்லிக்கட்டு மற்றும் பொங்கல் மகிமையை மறந்து விடாமல் இருக்க இது போன்ற போட்டிகள் நடத்தப்படுவது வரவேற்க கூடியது.

இதை யார் செய்தாலும் கண்டிப்பாக ஆதரவு கொடுக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.

இன்று பிபிபி கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற உச்சமன்ற கூட்டத்திற்கு பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles