

பத்துமலை ஜன 19-
தமிழ் கடவுள் முருகப் பெருமான் குடிக் கொண்டிருக்கும் பத்துமலை திருத்தலத்தில் இன்று இந்திய கலாச்சார மையம் அதிகாரப்பூர்வமாக திறப்பு
கண்டது.
ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர் நடராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இந்திய கலாச்சார மையத்தை ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் மற்றும் துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தனர்.
இந்த இந்திய கலாச்சார மையத்தில் நமது பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையில் இந்திய இசைக் கருவிகளான மிருதங்கம், வயிலின், தபேலா உட்பட அனைத்து கருவிகளும் இடம் பெற்றுள்ளன.
மேலும் இந்த தெய்வ சிலைகளும் ஓவியங்களும் இடம் பெற்றுள்ளது பெருமைக்குரியது.
இந்தியர்களின் பாரம்பரியத்தை படம் பிடித்து காட்டும் வகையில் பத்துமலை திருத்தலத்தில் கலாச்சார மையத்தை அமைத்த டான்ஸ்ரீ டாக்டர் ஆர் நடராஜா மற்றும் தேவஸ்தானத்தை பெரிதும் பாராட்டுவதாக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவசனத்தில் அறங்காவலர் டத்தோ கண்ணா சிவகுமார், டத்தோ சுரேஸ், நாராயணசாமி, செயலாளர் சேதுபதி, பொருளாளர் டத்தோ அழகன், கதிரேசன், ம இகா தேசிய உதவித் தலைவர் டத்தோ முருகையா உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

