அதிமுக, விஜய் மீது அண்ணாமலை தாக்கு

மதுரை: ஜன 20-
அதிமுக, விஜய் மீது அண்ணாமலை தாக்கி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் எந்த கட்சிகள் எல்லாம் காணாமல் போகுதோ அந்த கட்சிகள் எல்லாம் விஜய்யை பார்த்து கூட்டணிக்கு அழைக்கிறது.

பாஜ கட்சி, விஜய் கட்சியை எதிர்பார்த்து ஒருபோதும் இல்லை. தேய தொடங்கிய கட்சிகள், இருப்பில்லாத கட்சிகள், இளைஞர்கள் இல்லாத கட்சிகள் விஜயை அழைக்கின்றனர்

இதே மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவே விஜய்யை கூட்டணிக்கு வாருங்கள் என அழைத்துள்ளார்.

ஏன் கூப்பிட்டார்? அவர் கட்சி எப்படி உள்ளது என அவருக்கே தெரியும்.

இன்று அரசியல் கட்சி துவங்கியவர்களுக்கு பாதுகாப்பு, நூற்றுக்கணக்கான போலீசார் என்றால், பிறகு எப்படி மக்களை சந்திக்க போகிறீர்கள்?

கூட்டத்தில் மக்கள் சொல்லும் பிரச்னைகளை எப்படி ஞாபகம் வைத்து கொள்ளப் போகிறீர்கள்?

நாளை நீங்கள் பதவிக்கு வந்தால் யார் வந்து உங்களை சந்திக்க முடியும்? அரசியலில் உள்ளவர்கள் எளிமையாக நடந்து சென்று மக்களை பார்க்க வேண்டும்.

அதை விட்டு விட்டு புரோட்டா கால், கெடு என நேரம் ஒதுக்கி சந்தித்தால் மக்களை எப்படி சந்திக்க முடியும்?

அரசியல் என்பது எளியவர்களுக்கா? வலியவர்களுக்கா? நட்சத்திர மதிப்பு உள்ளவர்களுக்கா?

தங்களை நிரூபிக்காமல் அரசியலுக்கு வந்தவர்களுக்கா? என்ற கேள்வியை கேட்க விரும்புகிறேன் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles