அமைச்சர் பாமி பட்சில் தலைமையில் தைப்பொங்கல் விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர்கள் ஒன்று கூடிபொங்கல் வைத்து மகிழ்ந்தனர்!

கோலாலம்பூர் ஜன 19-
தித்திக்கும் தைப்பொங்கல் தமிழர் திருநாளை முன்னிட்டு நாடு தழுவிய அளவில் தைப்பொங்கல் விழா மிகவும் விமர்சையாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் தகவல் தொடர்பு துறை அமைச்சர் மற்றும் பந்தாய் டாலாம் நாடாளுமன்ற உறுப்பினர் பாமி பட்சில் தலைமையில் இன்று IWK Eco Park வளாகத்தில் தைப்பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது.

லெம்பா பந்தாய் நாடாளுமன்ற மக்கள் சேவை மையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த தைப்பொங்கல் விழாவில் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள், கலாச்சார விளையாட்டுகள் இடம் பெற்றன.

அமைச்சர் பாமி பட்சில் பொங்கல் பானையில் பாலை ஊற்றி பொங்கல் வைத்து கொண்டாடினார்.

அதே நேரத்தில் நூற்றுக்கணக்கான மகளிர்கள் பொங்கல் வைத்தனர். பழ இன் மக்களை சேர்ந்தவர்களும் இந்த தைப்பொங்கல் விழாவில் கலந்து மகிழ்ந்தனர்.

இந்த தைப்பொங்கல் விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்ததில் பெறும் மகிழ்ச்சி அடைகிறேன்.

இளய தலைமுறை நமது பாரம்பரியத்தை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என அவர் கேட்டு கொண்டார்.

தகவல் தொடர்பு துறை அமைச்சரின் சிறப்பு அதிகாரி டத்தோ சிவபாலன், மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன், லெம்பா பந்தாய் கெஅடிலான் தொகுதி உதவித் தலைவர் பக்தவச்சலம், ஸ்டார் மணியம், லெம்பா பந்தாய் கெஅடிலான் மகளிர் அணி உறுப்பினர் ஷினா உட்பட பலரும் இதில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles