போர்நிறுத்த காலத்தில் 127 பாலஸ்தீனியர்கள் திருப்பி அனுப்ப மலேசியா ஏற்பாடு செய்கிறது

ஜோர்ஜ் டவுன் ஜன 20;- மலேசியாவுக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்ட 41 காயமடைந்த நபர்கள் உள்பட 127 பாலஸ்தீனியர்கள் திருப்பி அனுப்ப அரசாங்கம் ஏற்பாடு செய்து வருவதாக துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

கிராமப்புற மற்றும் பிராந்திய மேம்பாட்டு அமைச்சராகவும் இருக்கும் அவர், கடந்த வார அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் விவாதிக்க பட்டதாகவும், அவர்கள் திருப்பி அனுப்பப் படுவதை வெளியுறவு அமைச்சகம் பாதுகாப்பு அமைச்சகங்களுடன் இணைந்து கையாண்டு வருவதாகவும் கூறினார்.

“சம்பந்தப்பட்ட இரண்டு அமைச்சகங்களும் எதிர்காலத்தில் இந்த விவகாரம் குறித்த விவரங்களை வழங்கும், அவர்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர்”.

“அவர்கள் (பாலஸ்தீனிய மக்கள்) சிகிச்சை பெற்று திரும்பி வருமாறு கோரியுள்ளனர்”… “எனவே போர்நிறுத்த சூழ்நிலையில், இது திருப்பி அனுப்புவதற்கான சரியான நேரமாக இருக்கலாம்” என்று அவர் இன்று இங்குள்ள கே. கே. டி. டபிள்யூ 2025 குடியேற்றத்தின் நிறைவு விழாவுக்குப் பிறகு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles